மதுரை, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் நாளை ( 31.08.2023 ) நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு 2 பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது. இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.