திருச்சி ரெயில் நிலைய நடைமேடை எண் 5- ல் சிறப்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் குற்றப்பிரிவு காவலர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வைத்திருந்த பை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் வைத்திருந்த பையில் பாக்கெட், பாக்கெட்டுகளாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஹபிஜிஸ் காசி (வயது32) என்பதும், ரயிலில் புகையிலைப் பொருட்களை திருச்சிக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது .அதன்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
Comments are closed.