திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டிற்க்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழா வரும் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23-ந் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.