Rock Fort Times
Online News

திருநெல்வேலி-சென்னை ‘வந்தே பாரத்’ ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் நாளை ( 24.09.2023 ) 9 வந்தே பாரத் ரயில்களை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில், தெற்கு ரயில்வே கோட்டத்தில் காசர்கோடு- திருவனந்தபுரம், சென்னை- விஜயவாடா, திருநெல்வேலி- சென்னை ஆகிய 3 ரயில்கள் இடம் பெற்றுள்ளன. திருநெல்வேலி- சென்னை ரயில் தொடக்க விழா திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நாளை நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா நாளை நடைபெற்றாலும் பயணிகள் சேவை திங்கட்கிழமை ( 25.09.2023 ) முதல் தொடங்கப்பட உள்ளது . இதன் முதல் பயணிகள் சேவையாக சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் ( எண் 20665) தாம்பரத்திற்கு பிற்பகல் 3.13 மணிக்கும், விழுப்புரத்திற்கு மாலை 4 .39 மணிக்கும், திருச்சிக்கு மாலை 6.40 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு இரவு 7.56 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கும், விருதுநகருக்கு இரவு 9.13 மணிக்கும், திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கும் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயில் பயணிகள் சேவை புதன்கிழமை தொடங்கப்பட உள்ளது. செவ்வாய்க்கிழமை ரயில் சேவை கிடையாது. திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் (ரயில் எண் 20666) விருதுநகருக்கு காலை 7.13 மணிக்கும், மதுரைக்கு காலை 7 .50 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு காலை 8.40 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.50 மணிக்கும், விழுப்புரத்திற்கு காலை 11.54 மணிக்கும், தாம்பரத்திற்கு பகல் 1.13 மணிக்கும் , சென்னை எழும்பூருக்கு பகல் 1.50 மணிக்கும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று ( 23.09.2023 ) தொடங்கிய நிலையில் சென்னை – திருநெல்வேலி இடையில் ஆன உத்தேச பயண கட்டணம் வெளியாகியுள்ளது. இதில் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பெட்டியில் பயண கட்டணமாக ரூ. 1155ம், முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவேக ரயிலுக்கான கட்டணம் ரூ.45, உணவு மற்றும் சிற்றுண்டிக்கு ரூ.38 , ஜிஎஸ்டி வரி ரூ.62 என மொத்தம் 1,610 வசூலிக்கப்படும். சொகுசு பெட்டியில் பயண கட்டணமாக ரூ.2375ம், முன்பதிவு கட்டணம் ரூ.60 , அதிவேக ரயிலுக்கான கட்டணம் ரூ.75 , உணவு மற்றும் சிற்றுண்டிக்கு ரூ.369, ஜிஎஸ்டி வரி 126 என மொத்தமாக 3005 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்