திருச்சி – புதுக்கோட்டை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் எம்பி குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்வது. அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.பாலன், சந்திரசேகர், சின்னசாமி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.