Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் ரயில்களின் நேரம் நாளை ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றம்…!

திருச்சி கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் நாளை (01-01-2025) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில்,
திருச்சி கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, திருச்சி – ஈரோடு -திருச்சி ரயில்களானது காலை 7 மணிக்கு பதிலாக 7.20 க்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.50 க்கு வந்தடையும்.
திருச்சி -காரைக்குடி – திருச்சி ரயில்களானது காலை 10.15 மணிக்கு பதிலாக 10.20 க்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்குப் பதிலாக 9.05 க்கு வந்தடையும்.
திருச்சி – திருப்பாதிரிப்புலியூர்- திருச்சி ரயில்களானது மாலை 3.45 மணிக்கு பதிலாக மாலை 3.55 க்கு புறப்பட்டு, காலை 10.45 மணிக்கு பதிலாக 10.50க்கு வந்தடையும்.
திருச்சி – ஈரோடு ரயிலானது மாலை 4.10 மணிக்குப் பதிலாக 4 மணிக்கு புறப்படும்.
திருச்சி -கரூர்- திருச்சி ரயில்களானது மாலை 6.20 மணிக்கு பதிலாக 6 மணிக்கு புறப்பட்டு, காலை 9.20 க்குப் பதிலாக 9.35 க்கு வந்தடையும்.
திருவாரூர்-திருச்சி ரயிலானது காலை 7 மணிக்கு பதிலாக 6.55 க்கு வந்தடையும்.
விழுப்புரம் – திருச்சி ரயிலானது காலை 9 மணிக்கு பதிலாக 9.25 க்கு வந்தடையும். மயிலாடுதுறை- திருச்சி ரயில் காலை 10.20 மணிக்கு பதிலாக 10.15 க்கு வந்தடையும். பாலக்காடு -திருச்சி ரயிலானது பிற்பகல் 1.50 மணிக்குப் பதிலாக 1.55 க்கு வந்தடையும்.

விழுப்புரம் – திருச்சி ரயிலானது காலை 9 க்குப் பதிலாக 9.25 க்கு வந்தடையும். மயிலாடுதுறை- திருச்சி ரயில் காலை 10.25 மணிக்கு பதிலாக 10.15 க்கு வந்தடையும். பாலக்காடு – திருச்சி ரயிலானது பிற்பகல் 1.50 மணிக்கு பதிலாக 1.55 க்கு வந்தடையும்.
ராமேஸ்வரம் – திருச்சி ரயிலானது இரவு 8.10 மணிக்கு பதிலாக 8.05 க்கு வந்தடையும். தஞ்சாவூர்- திருச்சி ரயிலானது இரவு 11.45 மணிக்கு பதிலாக 10.25 க்கு வந்தடையும்.
இதேபோல, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருப்பாதிரிப்புலியூர், புதுச்சேரி, திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பட்டுக்கோட்டை, அகஸ்தியம்பள்ளி, திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி, கடலூர் துறைமுகம், காரைக்கால், மன்னார்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் ரயில்களின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்