சென்னையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக கொடுத்த பயத்தால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், ரஜினி அப்படிப்பட்டவர் அல்ல என்றும், ஒரு பெரிய ஆளுமையை இதுபோன்று அவதூறாக பேசக்கூடாது என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தனக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த் ‘காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ என தெரிவித்துள்ளார்.

Comments are closed.