Rock Fort Times
Online News

திருவெறும்பூர் பகுதியில் பயணிகள் நிழற்குடை…

திருநாவுக்கரசர் எம்.பி. திறந்து வைத்தார்...

திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி போலீஸ்காலனி ஐ.டி.பார்க்கில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திருநாவுக்கரசர் எம்.பி. கலந்துகொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், திருவெறும்பூர் தெற்கு காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் ரகுவரன், மாவட்ட நிர்வாகிகள் சுப.கோவிந்தன், எழிலரசன், அர்ஜுன், பரணி, சோழமாதேவி சிங்காரவேல், வடக்கு மாவட்ட பொருளாளர் இளையராஜா, லால்குடி வட்டார தலைவர் சுப்பிரமணியன், மணப்பாறை வட்டாரத் தலைவர் சிவ சண்முகம், விவசாய அணி சுப்பிரமணி, திருவெறும்பூர் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வராஜ், கும்பக்குடி மணி, கலை பிரிவு யுவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், நவல்பட்டு ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்