நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அந்தந்த கட்சிகள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் அதற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் அளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024(புதன் கிழமை) முதல் 1.3.2024 (வெள்ளிக் கிழமை) வரை
விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம். பொதுத்தொகுதிக்கு 20ஆயிரமும், தனி தொகுதிக்கு 15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.