Rock Fort Times
Online News

அ.இ.பு.த.ம.மு.க. கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம்…* சசிகலா…!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையடுத்து தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரசாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்தநிலையில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்கிற பெயரில் சசிகலா கட்சி தொடங்கியுள்ளார். தேர்தலில் இந்த கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டிலும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று சசிகலா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கட்சியில் விருப்பமனு விநியோகம் இன்று( மார்ச் 18) முதல் தொடங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். இன்று முதல் மார்ச் 22-ந்தேதி வரை போயஸ் கார்டன், ஜெயலலிதா இல்லத்தில் தொண்டர்கள் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்