சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நேற்று (ஆகஸ்ட் 13) போலீசார் கைது செய்தனர்.இந்தநிலையில் துப்புரவு தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக அமைப்புகளை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.