Rock Fort Times
Online News

தூத்துக்குடி பனிமய மாதா தங்கத்தேரில் பவனி…! லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…..

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் பசலிக்கா அந்தஸ்து பெற்றது ஆகும். தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பனிமய மாதாவை ஜாதி, மத வேறுபாடுமின்றி அனைத்து மக்களும் வழிபடுகின்றனர். இந்த ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி ஆடி மாதம் திருவிழா நடக்கும். ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 1806-ம் ஆண்டு முதல் தங்கத்தேரில் மாதா பவனி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 15 முறை தங்கத்தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் இந்த ஆண்டு 441-வது கோவில் திருவிழாவை முன்னிட்டு 16 -வது முறையாக இன்று ( 05.08.2023 ) தங்க தேர்த்திருவிழா நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களும் பங்கேற்றனர். தங்கத்தேர் திருவிழாவிற்காக 53 அடி உயர தங்கத்தேர் சுமார் ஒன்றை கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஜப்பான் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க இழைகள் மற்றும் அமெரிக்கன் டைமண்ட் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு இன்று காலை 7 மணிக்கு மாதா பவனி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாதாவை தரிசனம் செய்தனர். திருவிழா நடைபெற்ற 10 நாட்களும் மறை மாவட்ட ஆயர்கள் தலைமையில் உலக மக்களுக்காக சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

 

 

ரோட்டுக்கடையில் நயன்தாராவுக்கு BIRTHDAY TREAT வைத்த விக்னேஷ் சிவன்

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்