Rock Fort Times
Online News

தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு காரணம் இதுதான்! சீக்ரெட் சொன்னார் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். , கடந்த இரண்டு வருடங்களாகவே நான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். அவ்வாறு நிறுத்திவிட்டதால் எனக்கு நல்ல விதமான தெளிவு கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்