Rock Fort Times
Online News

திருப்பரங்குன்றம் ‘தீபம்’விவகாரம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யக்கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மனு…!

சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி, தீபம் ஏற்றச்சென்றபோது அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, நீதிபதியின் தீர்ப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தின. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. இந்தநிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீஸ் மக்களவை சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்க தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். அதன் அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி 120-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்ட நோட்டீசை எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, கனிமொழி,  டி.ஆர்.பாலு, ஆ. ராசா உள்ளிட்டோர் மக்களவை சபாநாயகரிடம் இன்று(டிச.9) வழங்கினர்.
****

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்