Rock Fort Times
Online News

திருச்சியில் தொல்.திருமாவளவன்

 தமிழாய்வுத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் இன்று திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற உள்ளது.இதில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்ற நாடாளுமன்ற உறுப்பினறும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் பங்கேற்க திருச்சி வந்துள்ளார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய பிறந்தநாள் விழா என்று மட்டும் இல்லாமல் 2024லின் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் தொடக்கவுரையாகவும் இருந்தது. முதலமைச்சர் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.கவை வரும் நாடாளுமன்ற தேர்த்தலில் வீழ்த்த வியூகம் வகுத்து உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் முதலமைச்சரின் பேச்சு இருந்தது. அகில இந்திய அளவில் பிஜேபிக்கு எதிரணி தான் அதிகம், ஆனால் அவற்றை ஒருங்கிணைப்பதில் தேக்கம் இருக்கிறது. அந்த தேக்கத்தை உடைப்பதற்கான ஒரு பிரகடனம் முதலமைச்சருடைய உரை என்று கூறியுள்ளார். பா.ஜ.கவை வீழ்த்த முதலமைச்சர்; திடிரென எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கு முன்பாகவே அவர் வியூகம் வகித்து விட்டார். காங்கிரசுடன் இனைந்து பி.ஜே.பியை வீழ்த்த வேண்டும் என்பதை ஏற்கனவே எங்கள் தரப்பிலும் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் சமையல் எரிவாயு விலை உயர்வை பற்றி திருமாவளவனிடம் கேட்டதற்க்கு சமையல் எரிவாயு விலை உயர்வால் சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் பிரதமர் மோடிக்கு அக்கரை இருக்கிறதே தவிர மக்களின் நலன் மீது இல்லை. மேலும் மத்திய அரசு சமையல் விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றார். மேலும் அவர் பேசுகையில் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் 70ல் இருந்து 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்