Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அருகே பட்டப்பகலில் திக்…திக்… முதியவரை கீழே தள்ளி அரிவாளால் மரண பயம் காட்டியவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? ( வீடியோ இணைப்பு)

திருச்சி, ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் அருகே யாத்திரி நிவாஸ் பகுதியில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டீக்கடைக்கு வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை இரண்டு பேர் அரிவாளுடன் வந்து அவரை கீழே தள்ளி காலால் எட்டி உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கழுத்தில் அரிவாளை வைத்து எங்களுடைய சமூகம் தான் இங்கே வெயிட் என்று கூறி கொலை செய்ய முயற்சித்தனர். நீ வேட்டி கட்டி இருந்தால் என்ன பெரிய ஆளா? உன் குடும்பத்தையே காலி செய்து விடுவேன், காவல்துறைக்கு போன் பண்ணு என்னை ஒன்றும் பண்ண முடியாது என்று அவரை மிரட்டுகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை யாரும் தட்டிக் கேட்க முன்வராததால் அந்த பெரியவர் முகத்தில் திகில் பரவியது. பின்னர் அந்த முதியவரை அவர்கள் எங்களிடம் வைத்துக் கொண்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி ஜோசி நிர்மல் குமார் மற்றும் திருச்சி மாவட்ட
எஸ்.பி.செல்வ நாகரத்தினம் ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே, பட்டப் பகலில் முதியவரை மிரட்டிய நபர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்