திருச்சி, தென்னூர் குத்பிஷரநகரை சேர்ந்தவர் அப்துல் ஜாபர் .இவரது மகன் சபாபுதீன் (வயது 48). இவர் தென்னூர் கே .எம் .சி பஸ் நிறுத்தம் அருகில் ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள், இவரிடமிருந்த 4500 ரூபாய் பணத்தை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பெயரில் தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவள்ளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் உறையூர் புது பணிக்கன்தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி வெங்கடேசன் என்பவரிடம் கத்தி முனையில் பணம் பறித்ததாக, உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.