Rock Fort Times
Online News

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை…- ஓ.பி.எஸ். திட்டவட்டம்…!

அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். முன்னாள் முதலமைச்சரான இவர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதலால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வருகிறார். மீண்டும் அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சி மேற்கொண்ட போதும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பாஜகவை நம்பியிருந்த அவர், தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். இந்தநிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்