நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜர் ஆவதற்காக திருச்சி நீதிமன்றத்திற்கு இன்று(08-04-2025) சீமான் வந்திருந்தார். பின்னர் அவர் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு வந்த பொழுது அவரை சி ஐ எஸ் எஃப் வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர் பாக்கெட்டில் சிறிய அளவிலான கத்தி ஒன்று இருந்துள்ளது. விமான நிலையத்துக்குள்ளும், விமானத்திலும் எந்த விதமான ஆயுதங்களும் எடுத்துச் செல்லக்கூடாது என்கிற விதி இருப்பதால் அந்த கத்தியை எடுத்துச் செல்லக்கூடாது என சி ஐ எஸ் எஃப் வீரர்கள் கூறி அதனை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அதன்பின் அவர் விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.