Rock Fort Times
Online News

திருச்சியில் பாஜக நிர்வாகிகள் வைத்த பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு…!

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்திடவும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நாளை ( மார்ச் 23) பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் பொதுக்கூட்டம் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று பாஜக நிர்வாகிகள் திருச்சியில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். அவற்றில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருமண்டபத்தில் மகளிர் அணி சார்பில் வைக்கப்பட்ட பேனர் ஒன்றையும், மண்டல் தலைவர்கள் வைத்துள்ள மற்றொரு பேனரையும் மர்ம நபர்கள் கத்தியால் கிழித்துள்ளனர். இந்த சம்பவம் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக்கோரி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்