திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேருக்கு ரூ.6.50 லட்சத்தில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி தீவிரம்…!
திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் உள்ள சுவாமி தேருக்கு ரூ. 6.50 லட்சத்தில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி தொடங்கியது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் தேரோட்டத்தில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்ட வீதியில் வலம் வருவர். இதில் அம்மன் தேருக்கு ஏற்கனவே ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டு விட்டது. தற்போது சுவாமி தேருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் ரூ. 6.50 லட்சத்தில் புதிதாக ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி தொடங்கியது. தேரின் இரும்புச் சக்கரங்கள் தேரிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு, இதில் ஹைட்ராலிக் பிரேக்கின் இரும்புக் கட்டைகள் பதிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments are closed.