ஆளுநர்களின் அத்துமீறல்களை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்..!
தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்..
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில்,
டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் தி.மு.க. சார்பில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பா.ஜ.க.-வின் 9 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அடிப்படை உரிமை, சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை விளக்கும் வகையில் எம்.பி.க்கள் குரல் எழுப்புவது. ஆளுநர்களின் அத்து மீறல்கள், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை எதிர்த்து குரல் எழுப்புவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.