Rock Fort Times
Online News

மத்திய கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் தேவை- முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்…!

நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று(10-03-2025) பேசுகையில், “தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது.Mதமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் மாநில அரசு பாழடிக்கிறது” என்றார். அவரது இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது கல்வி அமைச்சர் திமுக எம்பிக்களை பார்த்து “அநாகரீகமானவர்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதனால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவர் பேசிய அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும்’ என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள், தமிழக எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?. நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா? என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்