Rock Fort Times
Online News

நட்சத்திரங்களை பார்த்து சூரியன் ஒருபோதும் அஞ்சியது கிடையாது – விஜய் பேச்சு குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி…!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக். 27) நடைபெற்றது. தொண்டர்கள் மத்தியில், பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என முதல் மாநாட்டிலேயே அரசியல் பிரச்சினைகள் குறித்து விஜய் பேசினார். தொடர்ந்து, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள். பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள்.  அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான். வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன?  இல்லாவிட்டாலென்ன?” என ஆவேசமாக பேசியிருந்தார். இந்நிலையில், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ்தளத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எத்தனை கட்சிகள் வந்தாலும் சரி; அதுகுறித்து கவலையில்லை; ஏனெனில் உதயசூரியன் என்றுமே நட்சத்திரங்களைப் பார்த்து அஞ்சியது கிடையாது; உதயசூரியனுக்கு நட்சத்திரங்களைப் பற்றி கவலையும் கிடையாது என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்