“ஆளுநர் பதவி என்ற தொங்கு சதையை அகற்றுவதே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தீர்வு”- திமுக இளைஞரணி மாநாட்டில் பரபரப்பு தீர்மானம்…!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று(21-01-2024) திமுக இளைஞரணி மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி கருணாநிதி எம் பி., திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் ஐ. பெரியசாமி, டி.ஆர்.பாலு எம் பி. இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழ்நாட்டை முதன்மை மாநில மாக்க அயராது பாடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்.
* கலைஞர் மகளிர் உரிமை திட்டம், காலை உணவு திட்டம்,
* நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மருத்துவ திட்டங்கள், பொங்கல் பரிசு தொகுப்பு போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சருக்கும் இந்த மாநாடு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.
* உயிர்ப்பலி வாங்கும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது.
* தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்துவது
* மாநில பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும்.
* அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கை ப்பாவையாக்கிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது
* கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும்
* நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்.
* நியமன பதவியில் உள்ள ஆளுநருக்கு பதிலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கும் முன் வடிவை இளைஞர் அணி ஆதரிப்பதுடன் அதனை விரைந்து நிறைவேற்றிட இம் மாநாடு வலியுறுத்துகிறது.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறிப்பாக பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளை நியமன பதவியான ஆளுநர் பதவியை கொண்டு செயல்பட விடாமல் தடுக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிப்பது.
* ஆளுநர் பதவி என்ற தொங்கு சதையை அகற்றுவதே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தீர்வு என இம் மாநாடு கருதுகிறது.
* தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளில் தமிழர்களை நியமிக்க இம் மாநாடு வலியுறுத்துகிறது.
* இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக தான் என்பதை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்துவது
* பாஜக ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.