Rock Fort Times
Online News

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டித்து திருச்சியில பேராசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகங்களில் பணியாற்றும் 20 பேராசிரியர்களின் பணியை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.  ஆனால் இதுவரை அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே 20 பேராசிரியர்களுக்கு பணியை உறுதி செய்ய வேண்டும். பணி உயர்வு திட்டத்தை செயல்படுத்தி நீண்ட காலமாக பணி உயர்வு பெறாமல் இருக்கும் பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும்.  சென்னை அண்ணா பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவத்தை, உறுப்புக் கல்லூரி பேராசிரியர்களுக்கும் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத்தினர் இன்று திருச்சி பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்