சான்றிதழ் வாங்க சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் – குளியல் அறைக்குள் ஓடிச் சென்று கதவை சாத்திக் கொண்டதால் தப்பினார்…!
கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். பின்னர் அவர் வேலையில் இருந்து நின்று விட்டார். அவர் திடீரென நின்றதால் வேலைக்கு சேரும்போது கொடுத்த சான்றிதழை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆகவே, சான்றிதழை பெற்று தருமாறு கல்லூரியில் படித்த போது தனக்கு வகுப்பெடுத்த பேராசிரியர் உதவியை நாடினார். அதற்கு பேராசிரியர் சிவப்பிரகாசம்(45) கல்வி சான்றிதழை பெற்று தருவதோடு இளம்பெண்ணிற்கு வேறு வேலையும் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இந்தநிலையில் சிவப்பிரகாசம் இளம்பெண்ணிடம் உனது சான்றிதழை வாங்கி வைத்துள்ளதாகவும், வந்துபெற்று கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதனை நம்பி அந்த பெண் பேராசிரியர் சிவப்பிரகாசத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது சிவப்பிரகாசம் அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரிடமிருந்து தப்பித்து வீட்டின் குளியல் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டு தனது பெண் தோழியை செல்போன் மூலம் தொடர்புகொண்டு நடந்த விஷயத்தைக் கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் தோழி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், குளியல் அறையில் இருந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் சிவப்பிரகாசத்தை போலீசார் கைது செய்தனர்.
Comments are closed.