Rock Fort Times
Online News

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி…!

அதிமுக- பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இன்று(23-01-2026) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் இரட்டை எஞ்சின் அரசு அமைவது உறுதியாக விட்டது என்று பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் அவர்களே… பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்