Rock Fort Times
Online News

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை இருமடங்கு உயர்வு..!

ஆயுத பூஜை நாளையும்(திங்கட்கிழமை), விஜயதசமி நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று(22-10-2023) ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூ மார்க்கெட்டில் பூ வியாபாரிகள்- பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, திருச்சி காந்தி மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அலங்கரிக்க தேவையான மாலைகள், தோரணங்கள், அலங்கார பொருட்கள் ஆங்காங்கே அதிகஅளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் ஆயுதபூஜையை யொட்டி பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.


ஒரு கிலோ மல்லிகை, முல்லை, ஜாதி பூ ரூ.600- க்கு விற்கப்பட்டது. செவ்வந்தி ரூ.220, கனகாம்பரம் ரூ.800-க்கும், அரளி ரூ.500- க்கும் பன்னீர் ரோஜா ரூ.240-க்கும், விருட்சிபூ-ரூ.320- க்கும், சம்பங்கி ரூ.350 என விற்கப்பட்டது. இதேபோல, பூக்கடைகளிலும் பூ மற்றும் மாலைகளின் விலை அதிகமாக இருந்தது. மேலும், அலங்கார பொருட்களும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாக இருந்தது. பழங்கள், பொரி விலையும் கணிசமாக உயர்ந்து இருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்