தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன் பஸ்சை டிரைவர் ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார். அப்போது நடுரோட்டில் டூவீலர் ஒன்று நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. பஸ் செல்ல வசதி இல்லாததால் டூவீலரை நடுரோட்டில் இருந்து எடுக்குமாறு ரமேஷ் எவ்வளவு சொல்லியும் வாலிபர்கள் கேட்கவில்லை. இதனால் டிரைவர் ரமேஷ் பஸ்ஸை இயக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், டவுன் பஸ்ஸில் ஏறி டிரைவர் ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டினர். வாக்குவாதம் முற்றவே, பஸ்ஸிலிருந்து கெட்ட வார்த்தையில் பேசியபடி டிரைவர் ரமேஷை, ஒரு வாலிபர் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் அந்த வீடியோவில், டிரைவரை ஆறு பேர் கொண்ட கும்பல் கெட்ட வார்த்தையில் திட்டியும் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலை வீடியோவாக படம் பிடித்த செய்தியாளர் நாச்சிமுத்து மற்றும் அருண் என்பவர்கள் மீதும் அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டிரைவர் ரமேஷ், நாச்சிமுத்து, அருண் ஆகிய மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணத்தில் பொதுமக்கள் கூடியிருக்கும் சாலையில் நடுவில், அரசு பஸ் டிரைவரை சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது பரவி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
Comments are closed.