Rock Fort Times
Online News

புகார் அளித்த பெண்ணிடம் உனது போட்டோவை அனுப்பு என்று ஜொள்ளுவிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்…! ( வீடியோ இணைப்பு)

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கரூர் வழியாக மதுரைக்கு கார் மூலம் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கரூர் மாவட்டம் வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெங்கமேடு போலீசார் குளத்துப்பாளையம் மேம்பால பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை இட்ட போது அதில் 168 கிலோ எடை கொண்ட ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அதன்பேரில் புகையிலை பொருட்கள் மற்றும் அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும், புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜலார் பகுதியைச் சேர்ந்த கேவர்ஷன்(40), ஹரிராம்(27), சுரேஷ் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போது கடத்தல் காரர்கள் வைத்திருந்த ரூ.1.25 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து கணக்கில் காட்டாமல் பதுக்கியதாக புகார் எழுந்தது. இது குறித்து வெங்கமேடு போலீசாரிடம், திருச்சி சரக டிஐஜி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன், தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமார், தான்தோன்றிமலை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வெங்கமேடு தனிப்பிரிவு ஏட்டு ரகுநாத் உட்பட 8 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கான உத்தரவை திருச்சி சரக டிஐஜி வருண் குமார் பிறப்பித்துள்ளார். இதுஒருபுறம் இருக்க இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியனும், புகார் அளித்த பெண் ஒருவரும் பேசிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் புகார் அளித்த பெண்ணிடம் போட்டோ அனுப்பும்படி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.புகார் அளித்த பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் ஜொள்ளு விடும் வீடியோ சக காவல்துறையினர் மற்றும் பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்