Rock Fort Times
Online News

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என இன்று ( 19.08.2023 )  அதிகாலை மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு செல்போனில் மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்து விட்டார். இதனால், பதற்றம் அடைந்த போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கன்னியாகுமரியை சேர்ந்த இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்