கள்ளிக்குடி பகுதியில் கட்டப்பட்ட மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்-திருச்சி வந்த முதல்வரிடம் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் மனு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று(02-02-2025) நடக்கிறது. நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது அவரிடம், திருச்சி மாவட்டம் துறையூர் புத்தனாம்பட்டியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் அபினிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வம் என்பவர், அரசு கொடுக்கக் கூடிய உதவித்தொகையிலும், ஜெராக்ஸ் கடையில் கிடைக்கும் வருவாயிலும் வாழ்ந்து வருகிறேன். தனது தொழில் அபிவிருத்திக்காக இன்வெர்ட்டர் பேட்டரி ஒன்றையும், புகைப்பட அச்சுப்பொறி கருவி ஒன்றையும் தனக்கு வழங்கி உதவிடுமாறு கோரிக்கை மனு அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதேபோல, திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் முதல்வரிடம் அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணிகண்டம் அருகே கள்ளிக்குடி பகுதியில் 2017 ல் கட்டப்பட்டு செயல்படாமல் இருக்கும் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments are closed.