அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு விவகாரம் – கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கறார் உத்தரவு !
சென்னை,அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சொற்பொழிவில் மகாவிஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம் மறுபிறவி என சர்ச்சைக்குள்ள வகையில் பேசியுள்ளார். அவர் பேசியது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் இனி கல்விக்கு சம்பந்தமில்லாத எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அனைவரும் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Comments are closed.