திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்று பல ஆண்டுகளாக சீரோடும், சிறப்போடும் செயல்பட்டு வருகிறது, ஸ்ரீ தைலா சில்க்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில், பெரிய கடைவீதி, மலை வாசல் அருகில்”ஸ்ரீ தைலா ஜூவல்லர்ஸ்” தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா ஏப்ரல் 11-ம் தேதி காலை 8 மணி அளவில் நடைபெற்றது. லலிதா நர்சிங் ஹோம் டாக்டர் சித்ரா, பார்க்கவன் மருத்துவமனை டாக்டர் அருணா, டாக்டர் அபிராமி, பச்சையப்பா சில்க்ஸ் சத்யா ஆகியோர் நகைக் கடையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். விழாவில், ஜுவல்லரி உரிமையாளர்கள் கணபதி, சுஜாதா, ஹர்ஷீல், வர்ணிக்கா மற்றும் உறவினர்கள், நண்பர்கள், வியாபார பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இங்கு புதுப்புது டிசைன்களில், வித விதமான தங்கம் மற்றும் வெள்ளி, வைர நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான நகைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அதன் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments are closed.