Rock Fort Times
Online News

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி…!

வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் அதிமுக-பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி அறிவிப்பை அடுத்து தமிழகம் முழுவதும் சட்டசபை பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க., முக்கிய பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி, திண்டுக்கல்லில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிலையில் சென்னையில் இருந்த அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் உடனடியாக பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்ததில் செரிமான கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்