Rock Fort Times
Online News

திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா- நாளை (செப்.28) நடக்கிறது!

திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் 61-வது பொதுக்குழு கூட்டம், கல்வி ஊக்க பரிசளிப்பு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் திருச்சி இ.பி.ரோடு, செல்வ விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்க திருமண மண்டபத்தில் நாளை(28-09-2025) ஞாயிற்றுக்கிழமை காலை 9-30 மணி அளவில் நடக்கிறது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் பி.விஜயகுமார் நாயுடு தலைமை தாங்கி சங்கத்தின் கொடியை ஏற்றி வைக்கிறார். துணைத் தலைவர்கள் டி.எல். கிருஷ்ணமூர்த்தி, ஜி.குணசேகரன், வி.ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இணைச்செயலாளர் ஜெ.வேணுகோபால் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.
சங்கத்தின் செயலாளர் எஸ்.கோவிந்தராஜுலு நாயுடு ஆண்டறிக்கை வாசிக்கிறார். பொருளாளர் ஆர்.பிரபுராம் 2024-2025 -ம் ஆண்டிற்கான
வரவு- செலவு கணக்குகளை சமர்ப்பிக்கிறார். விழாவில், 2024 -25ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கமும், நற்சான்றிதழ்களும், மற்றவர்களுக்கு ஊக்க பரிசும் வழங்கப்படுகிறது. பரிசுகளை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் முன்னாள் தலைமை ஆசிரியர் பு.வெ.தேவராஜ் வழங்குகிறார். முடிவில் சங்கத்தின் துணைத் தலைவர் பி.என். கலிய பெருமாள் நன்றி தெரிவித்து பேசுகிறார். விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்