சென்னையில் வரும் 9 , 10-ம் தேதிகளில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகள் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூறியது. இந்தப் போட்டிகள் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தீவுத்திடலிலிருந்து ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் ரேஸ் நடைபெறுகிறது. இதற்கு தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்றன. இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கார் பந்தயம் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவதாக இருந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.