“பாரதிய ஜனதாவை வீழ்த்துவது தான் முதல் பணி”- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் செல்வ பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ் அழகிரி இருந்து வந்தார். அவர் திடீரென , மாற்றப்பட்டு செல்வப் பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- என் மீது நம்பிக்கை வைத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஏற்கனவே சட்டமன்ற கட்சித் தலைவராக முக்கியமான பொறுப்பை அளித்தார்கள். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். எல்லா தலைவர்களையும் அனுசரித்து, கட்சியை வளர்க்க பாடுபடுவேன். நான் கோஷ்டியாக இருந்தால்தான் எல்லோரும் கோஷ்டியாக இருப்பார்கள். அதற்கு எங்களிடம் வேலை இருக்காது. எல்லோரும் ராகுல் காந்தி அணிதான். கருத்துவேறுபாடு இனி ஏற்படாத வகையில் பார்த்து கொள்வேன். சமூகநீதியில் தான் காங்கிரஸ் கட்சி கட்டப்பட்டுள்ளது. சமூகநீதி மேல் யாரெல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். இந்த தேசத்திற்கு பெரிய ஆபத்து பா.ஜ.க-தான். அவர்களை வீழ்த்துவதுதான் முதல் பணி. அழகிரி அவருக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்தார். உடல் நிலை சரியில்லாதபோதும் அவர் வேலை செய்தார். குறிப்பாக கொரோனா காலத்தில் தூத்துக்குடி வரை சென்று பணியாற்றினார். 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.