தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் திரிஷா, பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, பிரபு, பிரியா வாரியர், சிம்ரன், ஜாக்கி ஷரப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று (10-04-2025) ரிலீசானது. “குட் பேட் அக்லி” திரைப்படத்தை காண இன்று காலை முதல் ரசிகர்கள் திரண்டு வந்தனர். நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சியில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் “குட் பேட் அக்லி” ரிலீஸ் ஆனது.
திருச்சியிலும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர்கள் படம் பார்ப்பதற்கு முன்னதாக தியேட்டர் வாசல்களில் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் ரசிகர் காட்சி திரையிடப்பட்டது. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து கருத்து கேட்டபோது, படம் பக்கா மாஸ், வேற லெவல் வெறித்தனமா இருக்கு… என்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று கூறப்படுகிறது.

Comments are closed.