திருச்சி மாவட்டம் , அளுந்தூர் கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் இன்று( 01.09.2023 ) காலை புள்ளிமான் ஒன்று ஊருக்குள் வந்துள்ளது, இதனைக் கண்ட நாய்கள் புள்ளி மானை விரட்டியதால் , பயந்து ஓடிய மான் கள்ளுக்காலில் மோதி கம்பி வேளியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் பார்த்த பொதுமக்கள் உடனடியாக மானை மீட்டு தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால் புள்ளிமான் இறந்து விட்டது. தகவலறிந்த
மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து, இறந்த புள்ளிமானை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த பகுதிக்கு புள்ளிமான் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.