திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரும் வைபவம்…! * 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகமான ஆனிதிருமஞ்சனம் அனைத்து சிவாலயங்களிலும் வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி, தென்கைலாயம் என போற்றப்படும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி படித்துறையில் இருந்து திருமஞ்சனம் எடுத்துவரும் நிகழ்வு இன்று( ஜூலை 1) நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனத்திற்காக வெள்ளி குடத்திலும், பித்தளை குடங்களிலும் புனிதநீர் எடுத்து, காவிரி படித்துறையில் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் கோவில் யானை லட்சுமி மீது வெள்ளி குடத்திலும், கோவில் அர்ச்சகர்கள் மற்ற குடங்களிலும் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து இன்று இரவு நடராஜருக்கு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து நாளை காலை ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் திருவீதி உலா வைபவமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Comments are closed.