சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஆல்பாஸ் முறை ரத்து..!- மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் கொதிப்பு…!
சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மூன்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இனி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற முடியாது. ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இதுகுறித்து பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்., ” கல்வி உரிமை சட்டத்தின்படி 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி கிடையாது என விதிகள் உள்ளபோது, மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனை தோல்வி அடைய செய்தால் அவர்கள் கல்வித்திட்டத்தில் இருந்தே வெளியேறி விடுவார்கள். இது பள்ளிகளில் இடைநிற்றலை அதிகரிக்கும். எனவே இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். கல்வி உரிமை சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி கொண்டுவரப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகவே தற்போது ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன தேவை என்பதை அந்தந்த மாநிலம்தான் அறியும். இதில் பெரியண்ணன் மனப்பான்மையில் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு ஒருபோதும் செயல்படக் கூடாது என கொதிப்புடன் பேசினார்.
Comments are closed.