Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது…* மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விஜய் வாழ்த்து…!

தமிழ்நாட்டில் இன்று(02-03-2026) முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த முறை தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,99,692 மாணவ, மாணவிகள், 27,474 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்று தொடங்கும் தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி முடிவடைகின்றன. மேல்நிலைப் பொதுத்தேர்வினை 281 சிறைவாசிகள் தேர்வெழுதவுள்ளனர். இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வின்போதும் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4900-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருச்சி மாவட்டம்:

திருச்சி மாவட்டத்தில் 258 பள்ளிகளில் 31ஆயிரத்து 215 பேர் தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் சிலர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கூட மையங்களில் மாணவ, மாணவிகள் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாத வகையில் 260 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு பணியில் ஆசிரியர்கள் அலுவலர்கள் என 3,000 க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் வாழ்த்து,

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “இன்று பொதுத்தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும், வாழ்த்துகளும் என்று பதிவிட்டுள்ளார்.

விஜய்,

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்