‘டெட்’ தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
தமிழகம் முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் திருச்சி கே.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பள்ளியில் சேரும் மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு புத்தகம், பேனாக்களை வழங்கினார். இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்டல தலைவர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் மலர்விழி ராஜேந்திரன், பொற்கொடி, பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என
நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் விபரம் முழுமையாக கிடைத்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு, ஆசிரியர்களை கைவிடாது என தெரிவித்தார்.
Comments are closed.