Rock Fort Times
Online News

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பலி, மேலும் பலர் படுகாயம்…!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஆண்டியபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று( ஜூலை 21) வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்தன. பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் வெகு தொலைவுக்கு எதிரொலித்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து சென்று நீண்டநேரம் போராடி அணைத்தனர். இந்த வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்