Rock Fort Times
Online News

பேருந்து-கார் பயங்கர மோதல்:- புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று விட்டு திரும்பிய 4 பேர் சாலை விபத்தில் பலி…!

புதுச்சேரியில் இருந்து 4 நண்பர்கள் பணி காரணமாக பெங்களூரு சென்று விட்டு நேற்று( ஏப்ரல் 12) திருவண்ணாமலை வழியாக புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சோமாஸ்பாடி, காட்டுக்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்தும், காரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்திலேயே காரில் சென்ற 4 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த சில பயணிகளும் காயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கிய காரை அங்கிருந்து போலீசார் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்