நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான 2026-27ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்தார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் 9 பள்ளிகளுக்கு இ – மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது. தலைநகர் டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.