திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அல்லா பிச்சை. இவரது மகன் முகமது ரியாஸ் ( வயது 22). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். உடல் நலக்குறைவால் அல்லா பிச்சை நேற்று இறந்தார். இந்நிலையில் முகமது ரியாஸ் திடீரென வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் இருந்து முகமதுரியாஸ் நேற்று கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி
முகமது ரியாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை இறந்த சோகத்தில் முகமது ரியாஸ் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.