Rock Fort Times
Online News

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…!

திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி பகுதியை சேர்ந்த ஹசம்அலி (வயது 26) என்பதும், போதை மாத்திரைகளை அவர் விற்றதும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் மற்றும் செல்போன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்